700 மில்லியன் டொலர் கடன் வசதி குறித்த ஆய்வுக்கு ஐ.எம்.எஃப் ஒப்புதல்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் தகவலுக்கு அமைய இதன் ஆய்வுகள் இன்று (27.05.2026) நடத்தப்பட உள்ளன.
இதன் கீழ், இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை
பாதிக்கப்படக்கூடிய தரப்பினரைப் பாதுகாக்கும் அதே வேளையில், செலவினங்களை ஈடுசெய்யும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளை மீட்டெடுப்பது, இந்த மறு ஆய்வுக்கு ஒப்புதல் பெறுவதில் ஒரு முக்கியப் படியாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் முன்னதாகக் கூறியிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், வெளிநாட்டுக்கையிருப்பு மட்டத்தை வலுப்படுத்துவதிலும், சந்தை மீதான நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்புவதிலும் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு அதிகாரிகளின் இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஊடாக பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் மத்தியிலான நம்பிக்கை வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதனூடாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருப்பதாகவும் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |