இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைப்பது கடினம்! பேராசிரியர் டெபோரா
International Monetary Fund
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
IMF Sri Lanka
By Kanna
தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைப்பது கடினம் என ஜோன் ஹெப்ஹின்ஸ் பல்கலைகழக பேராசிரியரும் அரசியல் ஆய்வாளருமான டெபோரா பிராவுட்டிகம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போதைய குழப்பநிலையிலிருந்து இலங்கை மீண்டாலே சர்வதேச நாணயநிதியம் உதவ முன்வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஸ்திரதன்மை இருந்தாலே உதவி
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "நிலவரம் தொடர்ச்சியாக குழப்பமானதாக காணப்படும்போது சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடமுடியாது.
அதேவேளை, நாட்டில் ஸ்திரதன்மை இருந்தாலே அவர்கள் உதவ முன்வருவார்கள். பணம்திருப்பி கிடைக்காது என கருதவேண்டிய நிலை காணப்பட்டால் சர்வதேச நாணயநிதியம் நிதி உதவி செய்யாது", எனக் குறிப்பிட்டார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி