கோட்டாபயவை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள்!
சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அரச தலைவரின் செயலகத்தில் இன்றைய தினம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சாங்யோங் ரீ(Changyong Rhee), சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் அன்னே-மேரி குல்டே-வூல்ப்(Anne-Marie Gulde-Wolf), மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் சிறிலங்காவிற்கான வதிவிடப் பிரதிநிதி துபாக்ஸ் பெரிதானு செடியாவான்(Tubagus Feridhanusetyawan) ஆகியோர் கலந்துகொண்டனர்.
நேற்றைய தினம் இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தினர், அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களின் சமீபத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட நாட்டின் பொருளாதார நிலை குறித்து கலந்துரையாட இருப்பதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
எவ்வாறாயினும், இக் கலந்துரையாடலின் போது பேசப்பட்ட விடயங்கள் இதுவரை அரசாங்கம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
