இலங்கைக்கு மீண்டும் பச்சைக்கொடி காட்டிய ஐ.எம்.எப்...!
சர்வதேச நாணய நிதியமானது இலங்கைக்கு முதற்கட்டமான நிதியுதவியை வழங்கியுள்ளதுடன், அடுத்த கட்ட நிதியுதவியை வழங்குவதற்கு மீண்டும் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினக்கும் சர்வதேச நாணயநிதிய பிரதி நிதிகளுக்கும் இடையில் அமெரிக்காவில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில், இந்த இக்கட்டான தருணத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கான தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
உறுதியளிப்பு
இதனை,சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜிவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த கடினமான தருணத்தில் இலங்கைக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் உறுதியாகவுள்ளது.
நெருக்கடியை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பங்களிப்பை வழங்குவது மிகவும் அவசியமாகும் என ஜோர்ஜீவா இலங்கைக் குழுவிடம் கூறியுள்ளார்.
