மைத்திரியை இரண்டாவது தடவையாகவும் சந்தித்த ஐ.எம். எவ். பிரதிநிதிகள்(படங்கள்)
இரண்டாவது தடவையாக சந்திப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இரண்டாவது தடவையாக நேற்று முன்தினம் (30) காலை நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் போது, நாட்டின் தற்போதைய நிலைமையை விளக்கிய முன்னாள் அதிபர், கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான பங்களிப்பை வழங்குமாறும், நாடு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அனைத்து வழிகளிலும் உதவுமாறும் தெரிவித்தார்.
கடன் மற்றும் நிறுவனங்களை மறுசீரமைப்பு மற்றும் விவசாயிகள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் மற்றும் சர்வதேச ஆதரவு
சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டல் மற்றும் சர்வதேச ஆதரவின் கீழ், கூடிய விரைவில் இவற்றை கட்டியெழுப்ப முடியும் என நம்புவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பொருளாளர் முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, ஷான் விஜேலால் டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னாள் அதிபரின் செயலாளர்களாக ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும்உதய ஆர் செனவிரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

