அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த ஈரான்
United States of America
Iran
Nuclear Weapons
Iran-Israel Cold War
Iran Nuclear Sites
By Thulsi
மீண்டும் அணுசக்தி பேச்சுவார்த்தையை தொடங்க அமெரிக்கா (USA) முயற்சி செய்து வருகிறது என ஈரான் தெரிவித்துள்ளது.
தொலைக்காட்சியில் உரையாற்றிய போது குறித்த விடயத்தை ஈரான் வெளி விவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி (Seyed Abbas Araghchi) கூறியுள்ளார்.
பேச்சவார்த்தையை எங்கே, எப்போது, எப்படி நடத்தலாம் போன்ற அம்சங்களை டெஹ்ரான் ஆராய்ந்து வருகிறது.
ஈரான் மீதான தடை
அதேவேளை, அவசர அவசரமாக நடத்தப்படும் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட ஈரான் தயாராய் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், ஈரான் மீதான தடை உத்தரவுகளை விலக்கத் தாம் தயாராய் இருப்பதாகக் கூறியிருந்தார்.
இம்மாதம் ஏழாம் திகதி இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன் நடந்த இரவு விருந்து நிகழ்வின்போது டிரம்ப் அவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

