அதிக கடனில் சிக்கித்தவிக்கும் நாடுகள் - சர்வதேச நாணய நிதியத்தின் தகவல்
அதிக கடனில் சிக்கித் தவிக்கும் நாடுகள் விரைவில் கடன் மறுசீரமைப்பில் முன்னேற்றத்தை அடையும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள, உலக இறையாண்மை கடன் வட்டமேசை கூட்டத்தொடரில் இதனை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
குறித்த விடயத்தை சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர், ஜூலி கோசாக் குறிப்பிட்டுள்ளார்.
பயிலரங்கு
20 முக்கியமான பொருளாதாரங்களின் நாடுகள் குழுவின் இணையவழி மூலமான சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து 20 முக்கிய பொருளாதார நாடுகளின் தற்போதைய தலைவரான இந்தியாவினால், பிரான்ஸ் தலைநகர் பெரிஸில், ஜூன் மாதம் 15 ஆம் திகதி பயிலரங்கு நடத்தப்படும் என அதன் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள், பெரிஸ் கிளப், சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றுடன் சில சமயங்களில் சீனாவும் பங்கேற்கும் எனக் கூறப்படுகிறது.
