ஐஎம்எப் இன் ஆதரவை சிறிலங்கா விரைவில் பெறும் - இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை
Parliament of Sri Lanka
Sri Lanka
By pavan
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அங்கீகாரத்தை இலங்கையினால் பெற முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை சாதகமான முடிவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்தவுடன் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத்சி தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்