எச்சரிக்கை: இலங்கையில் இருந்து பிரித்தானியா, பிரான்சுக்குப் போக நினைப்பவர்கள் கவனம்!! திருப்பி அனுப்பப்படுவீர்கள்!!
இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புத் தேடி, அல்லது அரசியல் தஞ்சம் நாடி பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு பயணிப்பவர்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகின்றார்கள்.
இந்த இரண்டு நாடுகளிலும் சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டு வருவதாலும், பொய்யான காரணங்களைக் கூறி இந்த நாடுகளுக்குப் பலர் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாலும், நியாயமான பத்திரங்கள், காரணங்கள் இல்லாது இந்த நாடுகளுக்குச் செல்லவேண்டாம் என்று இலங்கையர்களை எச்சரிக்கின்றார், வதிவிட அனுமதி தொடர்பான விடயங்களைக் கையாண்டுவருகின்ற ஒரு சட்டத்தரனி.
ஐரோப்பிய நாடுகளுக்கு இளைஞர்களை ஏமாற்றி அனுப்புவது இன்று ஒரு பெருவியாபாரமாகிவிட்டுள்ளது.
போலி முகவர்கள்
பல போலி முகவர்கள் போலி நிறுவனங்களுக்கு என்று கூறி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுவருகின்றார்கள். இங்கு வந்ததும் குறிப்பிட்ட ஒரு நிறுவனமே இங்கு இல்லை என்று நடுவீதியில் விடப்பட்ட பலர் இங்கு இருக்கின்றார்கள்.
சுப்பர் மார்கெட்டில் வேலை என்று கூறி ஒரு கோடி ருபாய் கொடுத்து பிரித்தானியா வந்த ஒரு பெண், ஒரு சிறிய பெட்டிக்கடை ஒன்றில் வேலைக்கு அமர்த்தப்பட்டதுடன, நாளொன்றுக்கு 16 மணி நேரம் வேலைசெய்யவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்.
எதிர்த்துக் கேள்வியெழுப்பியபோது நடு ராத்திரியில் குழந்தைகளுடன் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டார்.
உயிர் அச்சுறுத்தல்
இப்படிப் பல சம்பவங்கள் பிரித்தானியாவில் நடந்துள்ளன. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறுகின்ற எத்தனையோ இளைஞர்கள் இங்கு நடுத்தெருவில் நின்றுகொண்டிருக்கின்றார்கள்.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் இங்கு அரசியல் தஞ்சம்தான் வழங்கப்படுகின்றது.
நீங்கள் ஒரு அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதன் காரணமாக உங்களது உயிருக்கு அங்கு அச்சுறுத்தல் என்பதை நீங்கள் ஆதாரங்களுடன் நிரூபித்தால் மாத்திரம் தான் உங்களுக்கு இங்கு அரசியல் தஞ்சம் வழங்கப்படும்.
‘இலங்கையில் பிரச்சனை’, ‘இலங்கையில் பொழுளாதாரச் சிக்கல்’ என்று கூறி தஞ்சம் கேட்ட பல இளைஞர்கள், அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்ற ஆபத்தில் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
எனவே ஐரோப்பிய நாடுகளுக்கு வர இருக்கின்ற இளைஞர்கள், நியாயமான காரணங்களுடன், நேர்த்தியான பத்திரங்களுடன் நேர்மையான வழியில் இங்கு வராவிட்டால், எதிர்காலத்தில் பாரிய சவால்களை இங்கு சந்தக்கவேண்டி ஏற்படும் என்பதுடன், திரும்பவும் இலங்கைக்கு அனுப்பப்படவேண்டி ஆபத்தினையும் எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என்று அந்தச் சட்டத்தரனி எச்சரிக்கின்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
