கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் உரிமை இல்லை -வெளியானது அறிவிப்பு
Gotabaya Rajapaksa
Sri Lanka
Immigration
By Sumithiran
உண்மையற்ற செய்திகள்
அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ச நேற்றையதினம் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என ஊடகங்கள் மற்றும் சமுக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம் (SLIEOA) இன்று மறுத்துள்ளது.
சட்டபூர்வ அதிகாரம் இல்லை
உத்தியோகபூர்வமாக பதவியில் இருக்கும் அரச அதிபரை அவரது உத்தியோகபூர்வ அந்தஸ்தின் அடிப்படையில் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளுக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என சங்கம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச செய்திச்சேவை
