சென்யார் புயலின் தாக்கம்! இந்தோனேசியாவில் 900பேர் பலி
Indonesia
Cyclone
By Dharu
மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான சென்யார் புயலால் இந்தோனேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்து, இந்தோனேசிய நாடுகளின் ஊடாக குறித்த புயல் கரையை கடந்த நிலையில் பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தோனேசியாவில் 'சென்யார்' புயலால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளால் குறித்த பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
மேலும், 410 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த வாரத்தில் இந்தோனேசியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் முழுவதும் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் 1,790 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அறிக்கைகள் விவரித்துள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்