விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடை..! இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Kiruththikan
தடை
300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புகையிரத சமிக்ஞை அமைப்புகள் மற்றும் தொடர்புடைய உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதால், புகையிரத விபத்துகள் குறித்து தீவிர கவலை ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டி காட்டினர்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி