இறக்குமதி தடை - மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்ட தகவல்
இறக்குமதி தடை தற்காலிகமானது
இலங்கையில் 300 அத்தியாவசியமற்ற பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி தடை தற்காலிகமானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணயக் கையிருப்பினை மட்டுப்படுத்தப்பட்ட அளவில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“இலங்கையின் பொருளாதாரம் பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் பொருளாதார மீட்சிக்காக, இலங்கை மத்திய வங்கியின் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு வெளிநாட்டுக் கையிருப்பை அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாகவே தடை செய்யப்பட்டுள்ளது. டொலர்களின் உள்வருகை தற்போது அதிகரித்துள்ளது. இது இலங்கைக்கு சாதகமான ஒரு விடயமாகும்” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
600 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை! - அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி! உடன் நடைமுறையாகும் வகையில் நிதி அமைச்சின் புதிய திட்டம்


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 6 மணி நேரம் முன்
