மருந்து இறக்குமதிக்கு கோட்டாபய விசேட பணிப்பு
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ விசேட பணிப்புரையை விடுத்துள்ளார்.
கொழும்பிலுள்ள அரச தலைவர் மாளிகையில் இன்று (3) இடம்பெற்ற சுகாதாரத் துறை தொடர்பான கலந்துரையாடலின் போது, கொரோனா நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாயை வழங்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நன்கொடையாளர்களிடமிருந்து பணம் சேகரிக்கப்பட்டது.
ஆனால் தற்போது, கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என அரச தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் மருந்துகளின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் உள்ளுர் மருந்துத் தொழிற்துறையை துரிதமாக அதிகரிப்பதற்கும், தேவையான மூலப்பொருட்களை இந்தியக் கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குமான சாத்தியக்கூறுகளை அரச தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

