3 வயது சிறுவனின் கொலையை மூடிமறைத்த காவல்துறை: நீதி கோரி கதறி அழும் தாய்!!
Batticaloa
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதிகோரி சிறுவனின் தாயார் ஊடகங்களை நாடியுள்ளார்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு இன்று(20) மாலை மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இதன்போது, குறித்த தாயார் தன்னுடைய விபத்தில் உயிரிழந்த மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் என அவர் கதறி அழுத வண்ணம் கேட்டுக் கொண்டார்.
அத்தோடு, காவல்துறை இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் தனது வாக்குமூலத்தையும் பதிவு சரியான முறையில் செய்யவில்லை என்றும் அவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்