அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர் காலமானார்
Hospitals in Sri Lanka
Death
Buddhism
By Thulsi
அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் (Anamaduwe Dhammadassi Thero) காலமானார்.
அவர் தனது 67 ஆவது வயதில் நேற்றிரவு (20) காலமாகியுள்ளார்.
மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கர்
பௌத்த மதத்தின் முக்கிய பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் துணை மகாநாயக்கராக ஆனமடுவ தம்மதஸ்ஸி தேரர் சேவையாற்றியிருந்தார்.
மேலும் குருநாகல் - கண்டி வீதியில் உள்ள எத்கந்த விகாரையின் விகாராதியாகவும் அவர் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்