இறக்குமதி பொருட்கள் மீதான தடை நீக்குவது தொடர்பில் வெளியான தகவல்
COVID-19
Ranjith Siyambalapitiya
By Vanan
மேலும் 328 பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு(20) வெளியிடப்படும் என அமைச்சர் சியம்பலாபிட்டிய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தளர்த்த நடவடிக்கை

ஜூன் 10 ஆம் திகதியன்று 240 க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் கடைசியாக தளர்த்தியது.
கொரோனா தொற்றுக் காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அரசாங்கம் பல பொருட்களுக்கு தடை விதித்தது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதி மீதான தடை கடந்த ஆண்டு நவம்பர் வரை நீடித்தது.
அதன் பிறகு அரசாங்கம் பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை மீள தளர்த்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி