லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்
srilanka
people
gas
litro
By Sumithiran
இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக அதனை பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நாளாந்தம் வரிசையில் நிற்கும் அவலம் தொடர்ந்தபடியே உள்ளது.
சில இடங்களில் வரிசைகளில் மக்கள் நின்றாலும் பாதிப்பேருக்கு எரிவாயு சிலிண்டர்கள் கிடைப்பதில்லை. இதனால் மக்கள் மோதலில் ஈடுபடும் சூழல் ஏற்படுகிறது.
இந்த நிலையில் கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இன்றிரவு தெரிவித்துள்ளார்.
அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் 01 மில்லியன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி