ஹைட்டியில் ஆயுதக் கும்பல்களின் வன்முறை:இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஹைட்டியில் கடந்த சில தினங்களாக வன்முறைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஹைட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் வீதிகளில் ஆயுதமேந்திய கும்பல் வன்முறையில் ஈடுபடுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஹைட்டியில் இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையர்களின் பாதுகாப்பு
மேலும் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அமைதியின்மை நிலவும் பகுதிகளில் இருந்து விலகி இருப்பதை நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ஹைட்டியில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஹைட்டியில் அங்கீகாரம் பெற்ற கியூபாவில் உள்ள இலங்கை தூதரகம் அந்தந்த நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |