வாகனங்கள் வாங்கவுள்ளோருக்கான முக்கிய அறிவித்தல்
வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது வாகனங்கள் கொள்வனவு செய்யும் தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குள் இறக்குமதி
இந்த வாகனங்கள் 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பல்வேறு சட்டவிரோதமான முறைகள் மூலம் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான வாகனங்களை தற்போது பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட உள்ளது.
எனவே வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு அமைச்சர் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
டொலரின் பெறுமதி வீழ்ச்சி
இதேவேளை இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைவதே அதற்கு காரணம் என அவர்கள்மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மையில் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் கடும் வீழ்ச்சியடைந்ததை கொண்டு இந்த முடிவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |