சாத்தியமற்ற ஆபிரகாம் உடன்படிக்கை முன்மொழிவு! ட்ரம்பின் திட்டத்திற்கு மறுப்பு
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் போருக்கு முடிவுகாணும் நோக்கில், பரந்த ஒப்பந்தத்தின் பகுதியாக ஆபிரகாம் உடன்படிக்கைகளின் கட்டமைப்பின் கீழ் இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த பரந்த ஒப்பந்தத்தின் பகுதியாக சவூதி அரேபியா, கட்டார், எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிடம் இந்த விடயத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஆனால், இந்த யோசனை நடைமுறையில் சாத்தியமற்றதாக இருப்பதாக சர்வதேச நெருக்கடிக் குழுவின் Ali Vaez தெரிவித்துள்ளார்.
முக்கிய நிபந்தனை
இதுகுறித்து அவர் கூறுகையில்,
“இந்த நாடுகளில் பலவற்றிற்கு, இஸ்ரேலுடன் உறவுகளை இயல்பாக்குவதற்கான முக்கிய நிபந்தனை ஈரானுடன் தொடர்புடையதல்ல.

அதற்கு பதிலாக, அமெரிக்காவும் இஸ்ரேலும் பாலஸ்தீனத்திற்கு மீளமுடியாத வகையில் ஒரு சுயாட்சி நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஆனால் தற்போதைய சூழலில் அது பரிசீலனையில் இல்லை. மேலும், ஈரானுடன் மேற்கொள்ளப்படும் சிக்கலான ஒப்பந்தத்தை தனது உள்நாட்டு ஆதரவாளர்களிடம் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காகவே ட்ரம்ப் ஆபிரகாம் உடன்படிக்கை கட்டமைப்பை முன்வைக்கிறார்.
“ஆபிரகாம் உடன்படிக்கைகளில் மேலும் பல நாடுகளை இணைப்பதன் மூலம், இஸ்ரேலை பாதுகாப்பான மற்றும் வலுவான நாடாக மாற்றும் அமெரிக்காவின் விரிவான திட்டத்தின் ஒரு பகுதிதான் இது என்பதை அமெரிக்காவில் உள்ள விமர்சகர்களுக்கு உணர்த்துவதே ட்ரம்பின் முக்கிய நோக்கமாகும்,” என கூறியுள்ளார்.
புதிய தாக்குதலை தொடுத்தால் பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |