வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு : கொட்டும் மழையிலும் வெடித்த போராட்டம்

SL Protest Northern Province of Sri Lanka Teachers Nagalingam Vedanayagam
By Independent Writer May 15, 2026 10:05 AM GMT
Report

வடக்கு மாகாணத்தில் உள்ள ஊழல் அதிகாரிகளால் இடமாற்றச் சபையை மீறி ஆசிரியர் இடமாற்றம் வழங்கப்பட்டமையை கண்டித்து கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று (15) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன் கருத்து தெரிவிக்கையில், வடமாகாண கல்வியை திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து ஊழல் கல்வி அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

பழிவாங்கப்படும் ஆசிரியர்கள் 

இடமாற்றச் சபையை மீறி தாங்கள் கட்சிகளுக்கு சார்பானவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு சார்பானவர்களை யாழ்ப்பாணத்திலே தொடர்ச்சியாக தங்க வைத்துவிட்டு கஷ்டப் பிரதேசங்களில் ஆசிரிய சேவையை செய்த ஆசிரியர்களை மீண்டும் வெளி மாவட்டம் அனுப்புகிறார்கள்.

யாழ். தீவகம் மற்றும் மருதங்கேணிப் பிரதேசங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவை ஆற்றிய ஆசிரியர்களை தமக்கு இயைவானவர்களை யாழ்ப்பாணத்தில் தக்க வைத்துக் கொள்வதற்காக திட்டமிட்ட முறையில் சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் ஆசிரியர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.

வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு : கொட்டும் மழையிலும் வெடித்த போராட்டம் | Improper Teacher Transfers In Northern Province

வடக்கு கல்வியில் ஊழல் புரிந்த பல அதிகாரிகள் தமது பதவிகளை தக்க வைத்துக் கொள்வதற்கும் உயர் பதவிகளை அடைவதற்காகவும் தேசிய மக்கள் சக்திக்கு பின்னால் இந்த முறைகேடான இடமாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இடமாற்றத்தில் பல குறைபாடுகள் இருக்கிறது என வட மாகாண ஆளுநருக்கு எழுத்து மூலம் ஆசிரியர் சங்கம் தெரியப்படுத்தியும் அவரும் தேசிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்காக இந்த இடமாற்றத்தை மேற்கொள்வதற்கு உறுதுணையாக இருக்கிறார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பான கருத்து எழுந்த போது முண்டியடித்துக் கொண்டு இந்த இடமாற்றம் செய்தே ஆக வேண்டுமென ஆளுநர் கூறியமை எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

வாழைச்சேனை ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு!

வட மாகாண ஆளுநரும் உடந்தை

வெளிமாவட்டங்களுக்கு ஆசிரிய பங்கீடு அவசியம் என்பதை ஆசிரியர் சங்கம் எப்போதும் கூறி வருவதுடன் அதற்கு எதிராக செயற்பட்டதும் இல்லை.

ஆனால் வெளி மாவட்டத்தில் பணியாற்றாத பல ஆசிரியர்கள் அரசியல் கட்சி மற்றும் உயர் அதிகாரிகளின் செல்வாக்குடனும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தங்கி இருக்க சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என்ற போர்வையில் முறையற்ற இடமாற்றங்களை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வடக்கு ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு : கொட்டும் மழையிலும் வெடித்த போராட்டம் | Improper Teacher Transfers In Northern Province

வடக்கு கல்வியை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு வட மாகாண ஆளுநரும் உடந்தையாக இருக்கிறார். அதற்கான பல ஆதாரங்களை நாங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

யாழ்ப்பாணத்தில் உயர் தர விஞ்ஞானப் பிரிவில் ஆங்கில மொழி மூலமான ஆசிரியரை பாடமே இல்லாத வலயம் ஒன்றுக்கு இடமாற்றம் வழங்கி இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் உயர்தர விஞ்ஞான பிரிவை திட்டமிட்ட முறையில் அழிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டமே இந்த இடமாற்றத்தின் பின்னணி.

ஆகவே கொட்டும் மழையில் இந்த ஆசிரியர்களின் போராட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற நிலையில் தொடர்ச்சியாக எமது கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் வரை தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்வோம்“ என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவின் ஆதரவுடன் ஈழத்தில் இனப்படுகொலை : தமிழீழம் குறித்து வன்னி அரசு பகிரங்கம்

இந்தியாவின் ஆதரவுடன் ஈழத்தில் இனப்படுகொலை : தமிழீழம் குறித்து வன்னி அரசு பகிரங்கம்

செய்திகள் - பு.கஜிந்தன், த.பிரதீபன் 


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
நன்றி நவிலல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, பூந்தோட்டம்

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026