பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்தில் முன்னிலை..!
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு பிரதமராக இருந்தபோது இம்ரான் கான் வெளிநாட்டுத் தலைவர்கள் அளிக்கும் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாத்து வரும் அரசாங்கம் கருவூலமான தோஷகனாவிடம் இருந்து பரிசுப் பொருட்களை மலிவு விலையில் வாங்கி சட்டவிரோதமாக விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.
இந்த வழக்கில் இம்ரான் கான் முன்னிலையாகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக பிணையில் வெளியில் வர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெண் நீதிபதிக்கு மிரட்டல்
இந்த உத்தரவை இரத்து செய்ய வேண்டும் என இம்ரான் கான் தாக்கல் செய்து இருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்குகள் மட்டுமின்றி பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த 2 வழக்குகளிலும் இம்ரான் கானை தங்கள் முன்பு காவல்துறையினர் முன்னிலைப்படுத்த வேண்டும் என இஸ்லாமாபாத் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டு பிணையில் வெளியில் வரமுடியாத கைது உத்தரவை சில நாட்களுக்கு முன்பு பிறப்பித்தது.
இதையடுத்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள வீட்டுக்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது காவல்துறையினருக்கும், இம்ரான்கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
காவல்துறை வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த நிலையில் கைது உத்தரவை இரத்து செய்யக்கோரி இம்ரான்கான் தரப்பில் தாக்கல் செய்து இருந்த மனுவை விசாரணை செய்யுமாறு செசன்ஸ் நீதிமன்றம் இந்த கைது உத்தரவை நிறுத்தி வைக்கு மாறு உத்தரவிட்டது.
நேரில் முன்னிலையானார்
இதையடுத்து காவல்துறையினர் கைது நடவடிக்கையை கைவிட்டனர். நேற்று இம்ரான் கான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.
BREAKING: Pakistan police have entered the property of former Prime Minister Imran Khan and is due to appear in court, in Islamabad later today
— Sky News (@SkyNews) March 18, 2023
Latest: https://t.co/PAiZ4D1jU3
📺 Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/XFNsrWCcNM
அங்கு அவர் மீது தொடரப்பட்டுள்ள 8 பயங்கரவாத வழக்குகளில் அவருக்கு பிணையில் வழங்கப்பட்டது. பரிசு பொருட்கள் விற்பனை முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வீட்டுக்குள் நுழைந்த பாகிஸ்தான் காவல்துறையினர் அங்கு கிடைக்கப்பெற்ற முக்கிய ஆவணங்களை இன்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.
இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இம்ரானை காண அவரது தலைமையிலான தெக்ரீக் -இ-இன்சாப்கட்சி தொண்டர்கள் நீதிமன்றம் முன்பு திரண்டு இருந்தைமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.