இந்து ஆலயத்தின் உடமைகள் திருட்டு - புலம்பெயர் இந்து அமைப்பு கண்டனம்
அமெரிக்காவில் உள்ள இந்து கோவிலுக்குள் புகுந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் உண்டியல் பணம் திருடப்பட்டதை அடுத்து, அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரசோசில் வசிக்கும் இந்திய சமூகத்தினர், அங்கு ஓம்கார் நாத் கோவிலை கட்டி வழிபட்டு வருகின்றனர்.
குறித்த கோவிலுக்குள் இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி தப்பிச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
விசாரணை
Indian community was left in a state of shock after burglars broke into a Hindu temple in the #US state of #Texas and stole its donation box, the media reported. pic.twitter.com/CL1EEdKXbe
— IANS (@ians_india) January 20, 2023
இது குறித்து கோவில் வாரியக் குழு உறுப்பினர் ஸ்ரீனிவாச சங்கரி கூறியதாவது, ''இச்சம்பவத்தால், எங்கள் கோவிலுக்குள் அத்துமீறல் நடந்துள்ளது. இந்த திருட்டால் எங்களின் தனிப்பட்ட உரிமையை இழந்துள்ளதாக உணர்கிறோம்.
இனி, கோவிலின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவோம். இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நிகழக் கூடாது.”என தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து அப்பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.