மின்கட்டண அதிகரிப்பு - நாளையதினம் இருளில் மூழ்கவுள்ள ஆலயங்கள்
Power cut Sri Lanka
Sri Lanka
Minister of Energy and Power
By Sumithiran
மின்கட்டண அதிகரிப்பு
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (9) பௌர்ணமி தினத்தன்று ஆலயங்களில் விளக்குகளை அணைத்து இருளில் மூழ்கவுள்ள பிக்குகளின் தீர்மானத்திற்கு ஆதரவாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், தேவாலயங்களிலும் விளக்குகளை அணைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன்படி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நாளையதினம் கோவில்களில் விளக்குகள் அணைக்கப்படும்.
அடையாளப் போராட்டம்
கொழும்பில் உள்ள பேராயர் மாளிகையில் இன்று (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சிறில் காமினி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் மின் கட்டணங்கள் மத நிறுவனங்களையும் பொதுமக்களையும் பாதித்துள்ளது. இதனால் இந்த அடையாளப் போராட்டம் நடத்தப்படுவதாக தந்தை தெரிவித்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்