பிரான்சில் மலிவு விலையில் வீடு வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
பிரான்சில் நிபந்தனைகளுடன் ரூபாய் 100 இற்கு வீடுகள் விற்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரமான அம்பர்ட்டில் உள்ள வீடுகள் ஒரு யூரோவிற்கு மட்டுமே விற்கப்படுகின்றன.
அதாவது இந்திய மதிப்பில் அது ரூபாய் 100 என தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில நிபந்தனைகளுடன் அவை விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சொந்தமாக வீடு
பிரான்சிலுள்ள, அம்பர்ட்டில் மக்கள் தொகை மிகக் குறைவு என்பதால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
இதனடிப்படையில், சொந்தமாக வீடு இல்லாதவர்கள் இங்கு வீடு வாங்கத் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டு வாங்குபவர்கள் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வீட்டில் வசிக்க வேண்டும் என வலியுருத்தப்படுகின்றது.
குறைந்த விலை
அத்தோடு, சொத்தை வாடகைக்கு எடுக்கக்கூடாது இல்லையெனில் அவர்கள் தகுதி பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வாங்குபவர்கள் இந்த விதிகளைப் பின்பற்றவில்லை என்றால் அரசாங்கம் மானியத்தை ரத்து செய்து அபராதம் கூட விதிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், குறைந்து வரும் மக்கள் தொகை பெருக்க ஐரோப்பாவில் இன்னும் பல நகரங்களில் வீடுகள் இவ்வளவு குறைந்த விலையில் விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
