இராணுவப் புலனாய்வுப் பிரிவுகள் கிழக்கில் மேற்கொண்ட ஒரு முக்கிய சதி நடவடிக்கை
இலங்கையில் தமிழர்களும், முஸ்லிம்களும் பிட்டும் தேய்காய்ப்பூவும் போல வாழ்ந்துவருகின்ற பிரதேசம் என்று கூறப்படுகின்ற ஒரு பிரதேசம்தான் கிழக்கு மாகாணம்.
அங்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு- அவர்களை நிரந்தரமாகவே பிரித்துவைப்பதற்காகவென்று- சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான சம்பவங்களில் ஒரு சில உதாரணங்களை மீட்டுப் பார்க்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.
தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு, அந்தத் தாக்குதல்களின் பழியினை முஸ்லிம்களின் மீது போடுவதையும், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்திவிட்டு- அந்தத் தாக்குதல்களின் பழியை தமிழர் தரப்பின் மீது போடுவதையும் ஒரு முழுநேரத் தந்திரோபாயமாச் செய்துகொண்டிருந்த சிறிலங்காப் புலலாய்வுப் பிரிவின் ஒழு முக்கிய சதியினை அம்பலப்படுத்துகின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
