சற்றுமுன்னர் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வு
இன்றைய (19.03.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.30 முதல் 10.00 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 11.00 முதல் 11.30 வரை நிலையியற் கட்டளை 27(2)-இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை11.30 முதல் மாலை 02.00 வரை கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளதுடன் மாலை 2.00 முதல் 5.30 வரை உலகின் தற்போது நிலவும் நிலைமை தொடர்பான எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு விவாதம் தொடரப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |