அடையாள அட்டைக்கான புகைப்படக் கட்டணம் அதிகரிப்பு
இலங்கையில் அடையாள அட்டை அல்லது நகல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபரின் டிஜிட்டல் நகல் எடுப்பதற்கு பதிவு செய்த புகைப்படக் கலைஞரால் அறவிடப்படும் அதிகபட்ச கட்டணம் 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த விலை இரத்துச் செய்யப்படுவதாக குறிப்பிட்டு பொது பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
முன்னர் இதற்குரிய கட்டணமாக அதிகபட்சமாக 150 ரூபாய் அறவிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை
ஒரு அடையாள அட்டை அல்லது அடையாள அட்டையின் நகல் நகலைப் பெறுவதில், விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையவழி மூலம் ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும்.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும், பின்னர் படிப்படியாக ஒட்டுமொத்த சமூகத்திற்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |