கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Sumithiran
முட்டையின் விலை அதிகரிப்பு
சந்தையில் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவை நெருங்குவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறுகையில், ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதேவேளை, பல்பொருள் அங்காடிகளில் பத்து முட்டைகள் கொண்ட ஒரு பொதி 660 முதல் 680 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கோழி தீவனத்தின் விலை உயர்வு
ஒரு கிலோ கோழி இறைச்சி 1300 ரூபா முதல் 1350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
கோழி தீவனத்தின் விலை உயர்வால் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி