பால், தயிர், இறைச்சி உள்ளிட்டவற்றின் விலைகள் இரு மடங்கில் அதிகரிப்பு!
பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலைகளையும் இருமடங்காக உயர்த்த தீர்மானித்துள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்தமையே இதற்கான காரணம் என அதன் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
இன்றையதினம், (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு
கால்நடை உற்பத்தியாளர்கள் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை பயன்படுத்த வேண்டி உள்ளது.
மின்சாரக் கட்டண உயர்வால், குளிர்சாதனப் பெட்டிகளில் பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்கு செலவுகள் கூடுதலாக ஏற்படும் என்பதால் இந்த விலை அதிகரிப்பை செய்வதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் கூறியுள்ளது.