மதுவரி திணைக்களத்தின் வரி வருமானம் அதிகரிப்பு
Sri Lanka
Economy of Sri Lanka
Excise Department of Sri Lanka
By Sathangani
இலங்கை மதுவரி திணைக்களத்தின் வரி வருமானம் அதிகரித்துள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வருடம் பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் 38.5 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மதுபானத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மது உற்பத்தி குறைவடைந்துள்ளது.
குறைவடைந்த உற்பத்தி
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மது உற்பத்தி 657,000 லீற்றர் அளவில் குறைந்துள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் சட்டவிரோத மதுபானம் தொடர்பான சுற்றிவளைப்புகளை மேற்கொள்ள நாடளாவிய ரீதியில் விசேட குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 7 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்