30 - 65 சதவீதத்தால் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு
ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு
புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 1ஆம் திகதி முதல் இக்கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, புகையிரத ஆசன முன்பதிவு கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளில் 30 முதல் 65 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இதேவேளை, பேருந்து கட்டண அதிகரிப்பு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத பயணிகளின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
[DCHUH8'
பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்று (30) பல புகையிரதங்களில் இரண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டதாகத் தெரிவித்த காமினி செனவிரத்ன, மேலும் பல புகையிரதங்களுக்கு நாளை இரண்டு கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.
