நாளை முதல் அதிகரிக்கப்படும் புகையிரத கட்டணம்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Railways
By Kiruththikan
ரயில் ஆசன முன்பதிவுக் கட்டணங்கள்
எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், புகையிரத ஆசன முன்பதிவுக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ். பொல்வத்தகே, நேற்று (30) தெரிவித்தார்.
அதற்கமைய புகையிரத ஆசன முன்பதிவுக் கட்டணங்கள் வெவ்வேறு பிரிவுகளின் கீழ், 30 தொடக்கம் 60 சதவீதம் வரை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் எனினும்,
வழமையான புகையிரத கட்டணம், பொதிகளுக்கான கட்டணம், ஏனைய கட்டணங்கள் திருத்தப்படவில்லை என்று மேலும் தெரிவித்தார்.
