பிரித்தானியா செல்லக் காத்திருப்போருக்கு பெரும் அதிர்ச்சி
பிரித்தானியாவில் சுற்றுலா மற்றும் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா கட்டண உயர்வு எதிர்வரும் அக்டோபர் 4ஆம் முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண கட்டமைப்பின் கீழ் ஆறு மாதங்களுக்கு குறைவான காலம் தங்குவதற்கான சுற்றுலா விசாவுக்கு கூடுதலாக 15 பவுண்டுகள் (இலங்கை மதிப்பில் 6000 ரூபா) உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு
மேலும் மாணவர் விசாவுக்கு கூடுதலாக 127 பவுண்டுகள் (50700 ரூபா) அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இங்கிலாந்துக்கு வெளியே அதாவது சர்வதேச மாணவர் ஒருவர் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் 490 பவுண்டுகளாகவும் (196000 ரூபா), சுற்றுலா விசா 115 பவுண்டுகளாகவும் (46000 ரூபா) உயர்த்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான வேலை மற்றும் சுற்றுலா விசாக்கள் விலையில் 15 சதவீதமும் முன்னுரிமை விசா, படிப்பு விசா விலையில் 20 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து மாணவர் விசா விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.