இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்! முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...
Sri Lanka Tourism
Sri Lanka
Tourism
By Shalini Balachandran
a year ago
அண்மைக்காலமாக இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் கடந்த 20 நாட்களில் மாத்திரம் நாட்டுக்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 131,684 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் இருந்து 19,832 பேர், ரஸ்யாவில் இருந்து 19,393 பேர், ஜேர்மனியில் இருந்து 11,936 பேர் மற்றும் சீனாவிலிருந்து 8,183 பேர் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
