குற்றத் தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு : 5 குற்றக் கும்பல் உறுப்பினர்கள் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation Drugs
By Sathangani Mar 25, 2024 04:06 AM GMT
Report

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மினுவாங்கொடை பன்சிலுபுர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி மினுவாங்கொடை - பொரகொடவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்தவருக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் இருந்து இலங்கைக்கு வந்தவருக்கு நேர்ந்த துயரம்

போதைப்பொருள் மீட்பு 

இதேவேளை, வாழைத்தோட்டம், செபஸ்டியன் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேலும் ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றத் தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு : 5 குற்றக் கும்பல் உறுப்பினர்கள் கைது | Special Roundup 5 Gang Members Arrested In Sl

சந்தேக நபரிடம் இருந்து 05 வாள்கள் மற்றும் 02 கிராம் 680 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர் வெளிநாட்டில் இருந்து வழிநடத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பாதுகாப்பு சேவை

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு: டிஜிட்டல் மயமாக்கப்பட்ட பாதுகாப்பு சேவை

கொலன்னாவயில் சுற்றிவளைப்பு 

அதேநேரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் கொலன்னாவ பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 03 கிராம் 190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

குற்றத் தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு : 5 குற்றக் கும்பல் உறுப்பினர்கள் கைது | Special Roundup 5 Gang Members Arrested In Sl

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், நேற்று கொட்டாஞ்சேனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிராம் 168 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலை சேர்ந்த மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை: மைத்திரியிடம் சஜித் விடுத்த வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மை: மைத்திரியிடம் சஜித் விடுத்த வேண்டுகோள்

ஒருவர் கைது

இதேவேளை, நேற்று மாலை பொரளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகாமையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 2 கிராம் 230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் திட்டமிட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத் தடுப்பு பிரிவின் விசேட சுற்றிவளைப்பு : 5 குற்றக் கும்பல் உறுப்பினர்கள் கைது | Special Roundup 5 Gang Members Arrested In Sl

பொரளை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மொஸ்கோ தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸின் அதிரடி நகர்வு

மொஸ்கோ தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸின் அதிரடி நகர்வு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025