மொஸ்கோ தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸின் அதிரடி நகர்வு
மொஸ்கோ மீதான தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் அரசாங்கம் தனது பயங்கரவாத எச்சரிக்கையை உயர்த்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் நேற்றையதினம்(24) அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகு இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
பிரான்சின் பயங்கரவாத எச்சரிக்கை அமைப்பு மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது, அதன்படி, பிரான்ஸில் அல்லது வெளிநாட்டில் ஒரு தாக்குதல் நடைபெற்றால் அல்லது அச்சுறுத்தல் விடுக்கப்படும் போது மிக உயர்ந்த நிலை எச்சரிக்கை செயற்படுத்தப்படுகிறது.
மொஸ்கோ தாக்குதல்
அத்தோடு, தொடருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் ஆயுதப்படைகளின் தீவிர ரோந்து போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை இது அனுமதிக்கிறது.
இந்நிலையில், மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரான்ஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
La France condamne avec fermeté l’attaque terroriste revendiquée par l’État islamique à Moscou. Solidarité avec les familles des victimes, les blessés et le peuple russe.
— Emmanuel Macron (@EmmanuelMacron) March 23, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |