எதிர்பாராத அளவு அதிகரிக்கும் மின் துண்டிப்பு நேரம்! வெளியாகிய தகவல்
Sri Lanka Economic Crisis
Power cut Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் கட்டமைப்பு செயலிழந்தமை காரணமாக நாளாந்த மின் துண்டிப்பை 5 மணி நேரமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தற்போதைய மின்சார கேள்வியினை முகாமைத்துவம் செய்யக்கூடிய இயலுமை உள்ளதாக குறிப்பிட்டார்.
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அணில் ரஞ்சித் கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
எனவே தற்போது அமுல்படுத்தப்படும் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேலதிகமாக மின் துண்டிப்பு காலத்தை அதிகரிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு அறியப்படுத்தியுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி