இலங்கையின் பொருளாதார உயிர்வாழ்தலை உறுதி செய்த இந்தியா
இந்தியா, உரிய நேரத்தில் இலங்கைக்கு உதவியளித்து இலங்கையின் பொருளாதார உயிர்வாழ்தலை உறுதி செய்துள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர், பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியா வழங்கிய ஆதரவு
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இலங்கைக்கான உதவியை உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று இலங்கையின் பொருளாதாரம் நிலைத்திருப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவே காரணம் என்பதை மீண்டும் வலியுறுத்த வேண்டும்.
யாரும் தலையிடாத போது இந்தியாவின் ஆதரவு கிடைத்தது. சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்காக இலங்கை சென்றுள்ளது. அது பல நிபந்தனைகளுடன் பல ஆண்டுகளாக வழங்கப்படும்.
அதனுடன் ஒப்பிடுகையில், இந்தியா உண்மையில் எங்களுக்கு 3.9 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
சீனா மற்றும் பாரிஸ் கிளப்புக்கு முன்னதாக இந்தியாவே இந்த உதவியை வழங்கியுள்ளது.
பெரும் சக்திகளின் போட்டி
இலங்கையின் வரலாறு முழுவதிலும், நாடு, பெரும் சக்திகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
பாதுகாப்பு பிரச்சினைகள் வரும்போது, இந்தியாவின் பாதுகாப்பே இலங்கையின் பாதுகாப்பாகும் என மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்