இந்தியாவின் நழுவல் போக்கு - தமிழருக்கான தீர்வை தமிழர் தரப்பே செய்ய வேண்டும்; இந்தியா தலையிட முடியாது!
அதிகார பகிர்வு விடயங்களை இடைக்கால தீர்வாக நடைமுறைப்படுத்தாது போனால் கிடைப்பதும் இல்லாது போய்விடும் என்பதை, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ் அரசியல் தரப்புக்கு தெளிப்படுத்தியுள்ளார்.
வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தெற்குடனான பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண்பதை தமிழர் தரப்பே செய்ய வேண்டும் எனவும் அதில் இந்தியா தலையிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரதிநிதிகள்
மேலும் தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது எனவும், வடக்கு-கிழக்கு தமிழ் அரசியல் பிரதிநிதிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதை தவிர அதிகார பகிர்வுக்கு எமது ஆதரவை முழுமையாக வழங்கத் தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இலங்கை விஜயம்
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பில் உள்ள இந்திய தூதுவர் இல்லத்தில் தமிழ் அரசில் தலைவர்களை சந்தித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 21 மணி நேரம் முன்
