பாகிஸ்தானின் அதிரடி அறிவிப்பு : வலுக்கும் மோதல்
இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்த முடியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 26 பேர் பலியாகினர்.
இதற்கு பதிலடி வழங்கும் வகையில் பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விமானங்கள்
அத்தோடு, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானிய பிரஜைகளும் ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் சார்க் விசா ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள விசா மூலம் பாகிஸ்தானியர்கள் இந்தியா வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது எனவும் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இனி பயன்படுத்த முடியாது என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
மேலும், தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைவதற்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
