இந்தியாவில் அதிகரித்த வெப்பத்தின் தாக்கம்! 9 பேர் பலி
இந்தியாவின் (India) சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கேரளா (Kerala), ஆந்திரா (Andhra Pradesh), பீகார் (Bihar), ஒடிசா (Odisha) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பாகங்களில் உள்ள இந்தியார்கள் இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெப்பத்தால் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்த வெப்ப அலை
ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப் பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதன்படி, ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கிழக்குப்ப குதியில் சராசரி வெப்பநிலை 28.12 செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறையும் வெப்ப அலை
தமிழ்நாட்டில் கரூர் (Karur), பரமத்தி (Paramathi), ஈரோடு (Erode), திருச்சி (Trichy), வேலூர் (Vellore), தர்மபுரி (Dharmapuri) உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலை வீசி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் நாட்களில் வெப்ப அலை படிப்படியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |