இஸ்ரேல் - ஈரான் மோதல்: உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல் மற்றும் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் குறித்து இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இஸ்ரேலில் தங்கியுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசு மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், நாட்டிலுள்ள இந்திய குடிமக்கள் அமைதியாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு இணங்கவும் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல்
அத்தோடு, இஸ்ரேலின் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறுகிறது.
இந்நிலையில், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கடந்த 14 ஆம் திகதி ஈரான் ஆதரவு போராளிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |