சூடுபிடிக்கும் தேர்தல் களம்: பொது வேட்பாளரை நோக்கி நகரும் தமிழ் மக்களுடைய ஆதரவு!
இந்தியா (India) இம்முறை இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நேரடியாகவே களமிறங்கியுள்ளதுடன் சர்வதேசத்தின் பார்வையும் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது.
இந்த விடயம் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தமிழர் தரப்பு தமிழ் மக்கள் சார்ந்து நோக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுடைய ஆதரவு பொது வேட்பாளரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் தமிழ் மக்களின் பழம்பெரும் கட்சியான தமிழரசுக்கட்சி (ITAK) முன்னுக்கு பின் முரணான அறிவிப்புக்களை வெளியிடுகின்றது.
தமிழர் தரப்பை தமிழர் தரப்பிலிருந்து குழப்புகின்ற செயற்பாடுகள் சமீப காலமாக நடைபெற்று வருகின்றது. தமிழரசுக் கட்சியினுடைய குழப்ப நிலையானது இனம் சார்ந்த வலுவான நிலையல்ல.
தமிழரசுக்கட்சி மோசமான நிலையை நோக்கி நகர்கின்றது.
மேலும், ராஜபக்ச குடும்பம் இல்லாத தேர்தலை மக்கள் எவ்வாறு எதிர்க்கொள்ள போகிறார்கள்? என்பது தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |