தமிழ் பொதுவேட்பாளர் ஏன் களமிறக்கம்: உண்மையை உடைத்தார் அரியநேத்திரன்
நாம் தொடர்ச்சியாக அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உரிமையை பெறவேண்டும் என்பதற்காகத் தான் போராடிக் கொண்டிருந்தோம்.
இராஜதந்திர ரீதியாக ஒரு அங்கீகாரத்தை பெறுவதற்காகவே தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு மன்னாரில்(mannar) நடைபெற்ற தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு பிரசார கூட்டத்தில் உரையாற்றிய பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன்(ariyanethran) தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான 15 வருடங்களில் நாம் சிதைந்து போயுள்ளோம்.தமிழர்களாக,கட்சிகளாக சிதைந்து ஒன்றுபடமுடியாமல் உள்ளோம். சர்வதேசரீதியாக,இராஜதந்திர ரீதியாக நாம் பேச்சுக்கு செல்லும்போது அவர்கள் எம்மை நோக்கி பந்தை எறிகிறார்கள்.
எனவே இதற்கெல்லாம் விடைகொடுக்கவேண்டிய தேர்தலாக நாம் அனைவரும் ஒன்றாக செல்லவேண்டியதன் காரணமாகவே தமிழ்தேசிய பொதுகட்டமைப்பு மற்றும் 07 அரசியல் கட்சிகள் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்...
தமிழர்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றார் பொது வேட்பாளர் : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |