திருகோணமலை ஆயரை சந்தித்தார் தமிழ் பொது வேட்பாளர்
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன்(ariyanethran) இன்று திருகோணமலை(trincomale) மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் ஆண்டகையுடன் விசேட சந்திப்பொன்று இன்று (14.09.2024) திருகோணமலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் இம்முறை ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிலவரங்கள் குறித்தும் திருகோணமலை மாவட்டத்தின் பொதுமக்களது நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
திசை திருப்பும் செயற்பாடுகள்
விசேடமாக பொதுமக்களை வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் திசை திருப்பும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும், அவற்றின் மூலமாக திசை திருப்பப்படாமல் தமது வாக்களிக்கும் உரிமைகளை நிறைவேற்றக்கூடியதான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

தமிழ் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமது தீவிர பிரசார பணிகளை மேற்கொண்ட நிலையில் தற்போது திருகோணமலைக்கு வருகை தந்துள்ளார்.
தமிழர்களை அணிதிரட்டுவதில் வெல்லப் போகின்றார் பொது வேட்பாளர் : யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் அறிவிப்பு
அதிகரிக்கும் ஆதரவு
இதேவேளை தமிழர் பிரதேசம் உட்பட புலம்பெயர் தேசத்திலிருந்தும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பவர்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்