ஜனாதிபதி தேர்தல் : முதலிடம் பிடித்த அநுர குமார திஸநாயக்க : எதில் தெரியுமா..!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களில், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayaka) அதிக எண்ணிக்கையில் கட்சி அலுவலகங்களை நிறுவியுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்காக நாடு முழுவதும் 4980 கட்சி அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத்திற்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித், ரணில் அடுத்த இடங்கள்
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்காக(ranil wickremesinghe) நாடு முழுவதும் 1013 கட்சி அலுவலகங்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்காக(sajith premadasa) நாடு முழுவதும் 3872 கட்சி அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகத்திற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தாயிரம் கட்சி அலுவலகங்கள்
அதன்படி, மூன்று முக்கிய வேட்பாளர்களுக்காக நாடு முழுவதும் கிட்டத்தட்ட பத்தாயிரம் கட்சி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான கட்சி அலுவலகங்கள் மேல் மாகாணத்தில் அமைந்துள்ளன. அடுத்த அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்கள் தென் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |