பண கஷ்டத்தில் வாடிய தையல்காரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..! லொட்டரியால் கிடைத்த மகிழ்ச்சி வாழ்க்கை
அதிர்ஷ்டம்
கேரளாவில் பண பற்றாக்குறையால் வங்கியில் கடன் வாங்க சென்ற தையல்காரருக்கு லொட்டரியில் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கேரளாவின் மூர்கட்டுபாடியில் தையல்கடை நடத்தி வந்த கனில் குமாரும் அவருடைய மனைவியும் கஷ்டத்தில் வாழ்ந்து வந்தனர்.
கிழிந்த துணிகளை தைக்கும் தங்களுக்கு வாழ்வில் முன்னேற்றம் வராதா என தம்பதி ஏங்கி வந்தனர்.இந்த சூழலில் தான் காருண்யா ப்ள்ஸ் லொட்டரி சீட்டை கனில் வாங்கினார்.
அதற்கான முடிவுகள் வந்த போது தனக்கு பரிசு விழவில்லை என அவராகவே நினைத்து கொண்டார்.
இலங்கை மதிப்பில்
பின்னர் தொழிலை பெரிதாக்க வங்கியில் கடன் வாங்குவது தொடர்பாக பேச கனில் சென்றார்.
அந்த சமயத்தில் கனில் வாங்கிய லொட்டரிக்கு முதல் பரிசாக ரூ 80 லட்சம் (இலங்கை மதிப்பில் ரூ. 3,60,53,266.27) விழுந்ததை அவர் நண்பர் பார்த்து இது குறித்து கனிலிடம் தெரிவித்தார்.
இதையடுத்து மகிழ்ச்சியில் துள்ளினார் கனில். சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்த கனில் தனது வாழ்வில் வெளிச்சம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
