கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள இந்திய யுத்தக் கப்பல் - மேற்கு கடற்பரப்பில் இடம்பெறவுள்ள நடவடிக்கை!
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான போர்க் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த போர்க் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையின் மரபுகளுக்கு அமைய இன்று காலை வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
143 மீற்றர் நீளமுள்ள INS சஹ்யாத்ரி போர் கப்பலில் 390 பேர் பயணித்துள்ளனர். குறித்த கப்பலின் கட்டளை அதிகாரி, இன்று மேல் மாகாண கட்டளைத் தளபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
போர்ப் பயிற்சி
இந்திய போர் கப்பல், இலங்கையில் தரித்து நிற்கும் காலப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சிறிலங்கா கடற்படையினால் மேற்கொள்ளப்படவுள்ள பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது.
குறித்த கப்பல் 16 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படும் முன்னர் மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.










